Pages

Sunday, August 7, 2011

திருநெல்வேலி பெயர் காரணம்

திருநெல்வேலி பெயர் காரணம்

தமிழகத்தின் பெரு நகரங்களில் ஒன்று திருநெல்வேலியாகும்.இந்நகரம் தென்தமிழகத்தில் அமைந்துள்ளது. வடமொழியில் இந்நகருக்கு "ஷாலிவாடி" என்று பெயர்."ஷாலி" என்றால் "நெல்" என்றும் "வாடி" என்றால் "வயல்" என்றும் பொருள்படும்.இந்நகரைச்சுற்றி நெல் வயல்கள் வேலிபோல் அமைந்துள்ளதால்,நெல்வேலி எனப்பெயர்பெற்றுள்ளது."திரு" என்ற அடைமொழியுடன் இவ்வவூர் திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது.

வேத சர்மா என்னும் அந்தணர் இறைவனுக்கு அமுது படைக்கும் பொருட்டு வெயிலில் உலர வைத்த நெல்மணிகளை,திடீரென வந்த மழையில் நனைந்துவிடாமல் இறைவன் வேலியிட்டு காத்ததால் இவ்வூர் நெல்வேலி எனப்பெயர்பெற்றதாகவும் கூறுவர்.

ஆதியில் இந்நகரம் முழுவதும் மூங்கில் காடாக இருந்ததாகவும்,எனவே இந்நகருக்கு "வேனு வனம்" என்ற பெயர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தஞ்சாவூரை "தஞ்சை" என அழைப்பது போல் திருநெல்வேலியை "நெல்லை"என அழைப்பர்.இந்நகரத்தின் நடு நாயகமாக அமைந்திருக்கும் இறைவனுக்கு "நெல்லையப்பர்" என்று பெயர் , "காந்திமதி" என்பது இறைவியின் பெயராகும்.

நெல்லைசீமை ஒரு வீரம் விளைந்த மண் என்பதற்கு சான்றாக இம்மண்ணில் தோன்றிய சுதந்திர போராட்ட வீரர்களான ..சிதம்பரனார், சுப்ரமணிய பாரதி, வீரபாண்டியகட்டபொம்மன் ஆகியோரை கூறலாம்.

சைவத்தையும் தமிழையும் இரு கண்களாக போற்றி வளர்த்தது இம்மண்.ஆதிதமிழரின் பண்பாட்டு எச்சங்களை தற்காலத்தில் இங்கு மட்டுமே காணமுடியும்.

திருநெல்வேலி என்ற பெயரை கேட்டவுடன் நினைவுக்கு வருவது இனிப்பான "அல்வா".அதிலும் "இருட்டுக்கடை அல்வா" மிகவும் பிரபலம்.

No comments:

Post a Comment