கோயில்களில் சுவாமிக்கு பூஜை நடக்கும் போது அர்ச்சகர் பூஜை மணியை ஒலிப்பார். ஆனால், திருப்பதி வெங்கடாஜலபதிக்கு பூஜையின்போது மணி ஒலிப்பதில்லை. இதற்கு காரணம் தெரியுமா? காஞ்சிபுரத்தில் அனந்தசூரி, தோதராம்பா என்னும் தம்பதியர் வசித்தனர். அவர்களது கனவில் தோன்றிய வெங்கடாஜலபதி, தனது ஆராதனைக்குரிய சிறிய மணியைக் கொடுத்தார். தோதராம்பா அந்த மணியை விழுங்கி விட்டது போல கனவு அமைந்தது. இதனால் குழம்பிய தம்பதியர், திருப்பதி சென்றனர். அங்கு பூஜையில் இருந்த மணியைக் காணாமல், அர்ச்சகர்கள் தேடிக் கொண்டிருந்தனர். பக்த தம்பதியரின் கனவில் வெங்கடாஜலபதி காட்சி தந்ததை அறிந்தனர். அந்த மணியின் அம்சமாக, வேதாந்த தேசிகர் பிறந்தார். இவ்வாறு மணியே குழந்தையாகத் தோன்றியதால் திருப்பதி கோயிலில் பூஜையின் போது ஆராதனை மணி ஒலிப்பதில்லை.
-
No comments:
Post a Comment