Pages

Sunday, August 7, 2011

வரலட்சுமி விரதம்!


ஆகஸ்டு 12 - வரலட்சுமி விரதம்!

மாங்கல்ய பாக்கியம் வேண்டி, மகாலட்சுமி யைப் பெண்கள் வழிபடும் நாளே வரலட்சுமி விரதம்.
இந்த இனிய நாளில், லட்சுமியின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்...
நான்காவது மனு என்ற மன்னரின் ஆட்சிக் காலத்தில், "விகுண்டை' என்ற பெண்ணுக்கு, மகனாகப் பிறந்தார் திருமால். தன் தாயின் பெயரால், "வைகுண்டன்' என்று பெயர் பெற்றார். அப்போது, "நளினி' என்ற பெயரில் பிறந்த லட்சுமி, அவரை மணந்து கொண்டாள். அவள் திருமாலிடம், தன் பெயரால் ஒரு நகரத்தை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார்; திருமாலும், "ஸ்ரீவைகுண்டம்' எனும் நகரை நிர்மாணித்துக் கொடுத்தார்.
அழகே உருவான ஸ்ரீவைகுண்டத் திற்கு, யாழ் மீட்டும் கந்தர்வப் பெண் ஒருத்தி சென்றாள். அவள் லட்சுமியின் அழகையும், கீர்த்தியையும் யாழிசைத்தபடியே புகழ்ந்து பாடினாள். இதை கேட்ட லட்சுமி, மனம் மகிழ்ந்து, தன் கூந்தலில் சூடியிருந்த நறுமணம் மிக்க மலர்ச்சரத்தை எடுத்துக் கொடுத்தாள். அதை பெறற்கரிய பிரசாதமாக நினைத்த அந்தப் பெண், தன் யாழில் சுற்றிக் கொண்டாள். வானவெளியில் அவள் செல்லும் போது, துர்வாசர் என்ற முனிவர் அவளைச் சந்தித்துப் பேசினார்.
அவ்விடத்தில் இதுவரை உணராத நறுமணம் கமழவே, அதற்கான காரணத்தை அப்பெண்ணிடம் கேட்டார். லட்சுமி தனக்கு தந்த சரத்தில் இருந்தே மணம் கமழ்வதாக சொன்ன அவள், "உங்களைப் போன்ற மகாமுனிவர்களே மகாலட்சுமியின் இந்த பிரசாதத்தை பெறத் தக்கவர்கள்...' என்று அதை கொடுத்து விட்டாள்.
அதை சாட்சாத் மகாலட்சுமியே தனக்கு தந்ததாகக் கருதிய துர்வாசர், அந்த மலர்ச்சரத்துடன் வானவெளிக்கு சென்றார். ஐராவதம் எனும் யானையின் மீது பவனி வந்த இந்திரனுக்கு, மலர் பிரசாதத்தின் அருமையைக் கூறி, அதைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அவன், அதை அலட்சியமாக வாங்கி, யானையின் மத்தகத்தில் வைத்தான். அதில் இருந்த வண்டுகள், யானையை மொய்க்கவே, அது எரிச்சலடைந்து மலரை இழுத்து போட்டு மிதித்தது.
இதைக்கண்டு கோபமடைந்த துர்வாசர், "இந்திரா... உனக்கு கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம் போன்ற கேட்பதைத் தருபவை இருப்பதால் தானே, லட்சுமி தாயாரின் தயவு தேவையில்லை என நினைத்து இவ்வாறு செய்தாய். அவை எதுவும் உனக்கு இல்லாமல் போகட்டும்...' என்றார்.
அவை, பாற்கடலில் சென்று மூழ்கி விட்டன. ஒருமுறை, பிருகு எனும் மகரிஷி, திருமாலின் பொறுமையை பரிசோதிப்பதற்காக அவரது மார்பில் எட்டி உதைத்தார். இதனால், திருமாலின் மார்பில் வசித்த லட்சுமியும், பாற்கடலில் சென்று மறைந்தாள்.
லட்சுமி கடாட்சத்தையும், செல்வத்தையும் இழந்த இந்திரன், மீண்டும் அதைப் பெறுவதற்காக பிரம்மனை வேண்டினான். அவை, பாற்கடலில் மறைந்திருந்த தகவலை அறிந்த பிரம்மா, திருமாலின் உதவியை நாடுமாறு சொன்னார். அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது, ஒவ்வொரு பொருளாக வெளியே வந்தது. லட்சுமி தாயாரும் வெளிப்பட்டாள். அவள் வெளியே வரும் போதே, முத்துமாலைகள் அணிந்தும், கையில் மணமாலையை ஏந்தியும் காட்சி தந்தாள். அவளுக்கு கங்கை, யமுனை முதலான புண்ணிய தீர்த்தங்கள் புனித நீரை வழங்கின. நவரத்தினங்கள் இழைத்த பொற்கலசங் களில் தீர்த்தமேந்தி வந்த யானைகள் அவளுக்கு அபிஷேகம் செய்தன. பிரம்மா பல ஆபரணங்களை வழங்கினார். சரஸ்வதி, நட்சத்திரங்களை மாலையாகக் கோர்த்து கொடுத்தாள். வானம் பட்டாடைகளை அளித்தது. வைஜெயந்தி என்ற மாலையை வருணன் அளித்தான். நாகலோகத்தினர் நெற்றிச் சுட்டியும், மகர குண்டலமும் அளித்தனர்.
அவளுக்கு பிடித்தமானவரை திருமணம் செய்து கொள்ளலாம் என பிரம்மா கூறவே, அவள் தன் கையில் இருந்த மணமாலையை திருமால் கழுத்தில் அணிவித்தாள்; திருமணம் இனிதே நிகழ்ந்தது. வரலட்சுமி விரத நன்னாளில், லட்சுமியின் வரலாற்றைப் படித்து, பூஜை செய்பவர்கள் செல்வ வளம், மாங்கல்ய பாக்கியம் பெற்று சிறப்புடன் வாழ்வர்.

WHEN INDRA WAS CURSED BY THE SAGE DURVASA FOR HIS CARELESS BEHAVIOR BY SPOILING THEDEVI'S HARA GIVEN BY HIM , HE WAS DRIVEN FROM THE INDRALOK BY THE ASURS & HE CAME TO THE EARTH & HID HIMSELF IN THE STEM OF A LOTUS . THEN HE BEGAN HIS PENANCE TO 1000 YEARS . THEN SRI MAHALAKSHMI APPEARED BEFORE HIM ! INDRA PRAISED HER WITH A STHOTHRA & SRI MAHALAKSHMI BLEDDED HIM TO GET BACK HIS INDRA LOK ! HIS STHOTHRA BEGINS WITH NAMASTHESTHU MAHAMAYE SRI PEETE SURA POOJITHE ; SHANKACHAKRA GATHA HASTHE MAHALAKSMI NAMOSTHU THE ........... & SO ON ! WHOEVER IS SUFFERING FROM POVERTY , IF THEY CHANT THIS STHOTHRA DAILY IN THE SANNADHI OF SRI MAHALAKSHMI , SHE WILL POSITIVELY REMOVE HIS POVERTY . THIS IS PARAMA SATHYAM ! OM SRI LAKSHMINARAYANAYA !

No comments:

Post a Comment